அடுத்த செய்திக் கட்டுரை
துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ!
எழுதியவர்
Arul Jothe
Jun 06, 2023
05:56 pm
செய்தி முன்னோட்டம்
துபாயில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் வெள்ளை ரோல்ஸ் ராய்ஸ் காரை சாவியுடன் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் விட்டு சென்றால் என்ன ஆகும் என்பதை அய்மன் யமன் என்பவர் படம் எடுத்து காண்பித்துள்ளார்.
வைரலாகும் இந்த வீடியோவில், ஒருவர் ஜிம்மிற்குள் செல்லும் முன் தனது விலையுயர்ந்த காரை சாவியுடன் வெளியே விட்டுச் செல்கிறார்.
ஜிம்மில் இருந்து அவர் திரும்பும் வரை அந்த கார் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.
அவர் நினைத்தவாறு திருட்டோ அல்லது வேறு எந்த விதமான அசம்பாவிதமோ நடக்கவில்லை.
துபாயை பொறுத்தவரை, காரும் சாவியும் யாருக்காவது கிடைத்தாலும் அதை அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.