LOADING...
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்

வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2026
12:18 pm

செய்தி முன்னோட்டம்

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து OP (OP - Outpatient) சீட்டு வாங்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக, 'நலம்AI' என்ற வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று முதல் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இப்புதிய சேவையை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

விவரங்கள்

சோதனை அடிப்படையில் அறிமுகம்

இத்திட்டம் முதல்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) நெஞ்சக நோய் பிரிவில் இன்று முதல் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இங்கு ஏற்படும் வரவேற்பைத் தொடர்ந்து விரைவில் இச்சேவை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

வழிமுறைகள்

"நலம்AI" வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

முதலில் உங்களது மொபைல் போனில் 96192 22999 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'Hi' என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். உடனடியாக உங்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷன் காட்டும். மொழியை தேர்வு செய்தவுடன், "NalamAI (TN-NHM)-க்கு வரவேற்கிறோம்! பதிவு, மருத்துவர் மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் ஆகியவற்றில் நான் உங்களுக்கு உதவ முடியும்" என்ற குறுஞ்செய்தி வரும். அதன் பின் உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழைந்தால், உங்களுக்கான ஓபி சீட்டு வாட்ஸ்அப்பிலேயே கிடைத்துவிடும்.

Advertisement