NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / EXPLAINER: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறைக்கும், நாக்பூர் கலவரத்திற்கும் என்ன தொடர்பு? 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    EXPLAINER: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறைக்கும், நாக்பூர் கலவரத்திற்கும் என்ன தொடர்பு? 
    நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

    EXPLAINER: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறைக்கும், நாக்பூர் கலவரத்திற்கும் என்ன தொடர்பு? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2025
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    திங்கள்கிழமை பிற்பகுதியில் மத்திய நாக்பூரில் வன்முறை வெடித்தது.

    இதன் காரணமாக நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மோதல்கள் வெடித்ததற்கு இரண்டு முக்கிய பிரச்சினைகளைச் சுற்றியுள்ள வதந்திகள் காரணம் எனக்கூறுகிறது காவல்துறை: ஒன்று, ஒரு சமூகத்தின் புனித நூலை அவமதித்ததாகக் கூறப்படுவது, மற்றொன்று, 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுவதற்கான கோரிக்கைகள்.

    பச்சைத் துணியை எரித்ததால், அதில் பல புனித வசனங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் வதந்திகள் பரவியதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    என்ன நடந்தது

    மோதல்களுக்கு வழிவகுத்தது எது?

    காவல் ஆணையரின் அறிவிப்பின்படி, நாக்பூரின் மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் என 200 முதல் 250 பேர் திரண்டனர்.

    அவர்கள் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

    அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை எரித்தனர். அதோடு பச்சை நிற ல புனித வசனங்கள் எழுதப்பட்டிருந்த துணியை எரித்ததாகவும் வதந்திகள் பரவியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதோடு பஜ்ரங் தள ஆர்ப்பாட்டத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகி, முஸ்லிம் சமூகத்தினரிடையே சீற்றத்தைத் தூண்டின.

    ஊரடங்கு 

    நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு

    வதந்திகள் பரவிய நிலையில் நேற்று சுமார் இரவு 7.30 மணியளவில் பல்தர்புராவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.

    அவர்கள் கடைகளை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது, தீ வைப்பது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, அதிரடி காவல்படையினர் திரண்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    எனினும் இந்த முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் காயமடைந்ததாகத் தெரிகிறது.

    அதனால், அமைதியை உறுதி செய்யும்வகையில் சட்டப்பிரிவு 163-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் குமார் சிங்கால் பிறப்பித்த உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

    அதோடு ஔரங்கசீப் கல்லறையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பின்னணி

    சர்ச்சையின் பின்னணி என்ன? 

    மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது.

    1707 மார்ச் 3-ம் தேதி, அவுரங்கசீப் இறந்த பிறகு, அவரது விருப்பத்தின் பேரில் இங்கு அவரது உடல் புதைக்கப்பட்டது.

    இந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் இது ஒரு பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது. பாலிவுட் வரலாற்று திரைப்படமான 'சாவா'யும், அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கைக்கு காரணமாகியுள்ளது.

    அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் (VHP) கோரிக்கைகளுக்கிடையில், அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

    சர்ச்சை

    ஔரங்கசீப்பின் வரலாற்றை வைத்து தற்போது சர்ச்சை அதிகரித்துள்ளது

    ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை சில இந்து வலதுசாரி குழுக்களிடையே வேகம் பெற்றுள்ளது.

    அவரது கொள்கைகள் அடக்குமுறையானவை என்றும், நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு முரணானவை என்றும் வாதிடுகின்றனர்.

    ஔரங்கசீப்பின் கல்லறை இருப்பது அடக்குமுறையின் சின்னம் என்றும், அதை அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தக் குழுக்கள் கூறுகின்றன.

    குறிப்பிடத்தக்க முகலாயப் பேரரசர்களில் கடைசியான ஔரங்கசீப் 1658 முதல் 1707 வரை ஆட்சி செய்தார்.

    அவர் தனது மரபுவழிக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றவர், அதில் இந்து கோயில்களை அழிப்பது மற்றும் ஜிஸ்யா (முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வரி விதிப்பது) ஆகியவை அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாக்பூர்

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    நாக்பூர்

    குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்  இந்தியா
    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை மதுரை
    மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் டால்கம் பவுடர், ஸ்டார்ச்? மருத்துவமனை
    2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025