மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து
மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருக்கும் முனையத்தை சென்றடைவதற்குள் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததால் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். விமானத்தில் மொத்தம் 14 பேர் இருந்தனர். அதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.19 மணிக்கு இந்த சம்பவம் ஏற்பட்டது. மியான்மர் ராணுவத்துக்கும், பொதுமக்கள் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக லாங்ட்லாய் மாவட்டத்தில் இருந்து தப்பியோடிய மியான்மர் ராணுவ வீரர்களை இந்த விமானம் ஏற்றிச் செல்லவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மொத்தம் 276 மியான்மர் வீரர்கள் மிசோரமுக்குள் தஞ்சமடைந்தனர். அதில் 184 பேர் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ள வீரர்களை ஏற்றி செல்ல இந்த விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது.