
பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி 03.11.2024 பிற்பகல் முதல் 04.11.2024 பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேலும், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, எம்எம்பிடி, எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம், ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மற்றும் மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எம்டிசி அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மாநகர போக்குவரத்துக் கழகம் அறிக்கை
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகள் கவனத்திற்கு! #MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Deepavali2024 | #SpecialOperation pic.twitter.com/9pk6yepXj0
— MTC Chennai (@MtcChennai) November 3, 2024
சிறப்பு பேருந்துகள்
தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு
அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இதுவரை இல்லாத அளவிற்கு இன்று (03.11.2024) ஒரே நாளில் 75,000-கும் மேற்பட்ட பயணிகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு http://tnstc.in அல்லது டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
— ArasuBus (@arasubus) November 3, 2024
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இதுவரை இல்லாத அளவிற்கு இன்று (03.11.2024) ஒரே நாளில் 75,000-கும் மேற்பட்ட பயணிகள் ஆன்லைன் முன்பதிவு… pic.twitter.com/dQK7zP3A6L