Page Loader
காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!
இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு உயிருடன் மீட்பு

காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!

எழுதியவர் Siranjeevi
Apr 20, 2023
02:18 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை மலையில் காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த மலையேற்று வீரரான அனுராக் மாலு என்பவர் பல சாதனைகளை படைத்தவர். இவர் அண்மையில், நேபாள நாட்டில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தை ஏறத்தொடங்கினார். ஆனால் அவர் மாலையில் திரும்பாத நிலையில் அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரை தேட ராணுவ மீட்புப்படை இறங்கியது. இந்நிலையில், அவரை உயிருடன் மீட்டுள்ளனர் மீட்புப்படையினர். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதேப்போல் 10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மலையேற்று வீரர் நோயல் ஹன்னா உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post