10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!
10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மலையேற்று வீரர் திடீர் மரணம். இந்தியாவின் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைசிகரமானது உலகின் உயரமான 10-வது சிகரமாகும். இந்த மலையுச்சியில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான வீரர்கள் நேபாளம் வருவது உண்டு. அந்த வகையில், அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா என்பவர் சிகரத்தில் ஏறி இறங்கிபோது இரவு முகாமில் தங்கியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஹன்னா உயிரிழந்துள்ளார். இவர் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனை படைத்தவர். இதுமட்டுமின்றி, அதே மலையில் இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு மாயமாகியதும் அவரை தேடியும் வருகின்றனர்.