இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை
இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அனுராக் மாலு என்பவர் மாயமாகியுள்ளார். இமயமலை அடிவாரத்தில் உள்ள நேபாளத்தில் அதிகமான மலைப் பகுதிகள் உள்ளன. இங்கு பலருல் மலையேறுவார்கள். அந்தவகையில், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்க் பகுதியை சேர்ந்தவர் அனுராக் மாலு வயது 34. இவர், நேபாளத்தில் உள்ள உலகின் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்கு மலையேறியுள்ளார். அப்போது மலையேற்றத்துக்கு பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முகாமிற்கும் அவர் திரும்பவில்லை. எனவே இதனால், நண்பர்கள் புகாரளிக்க மாயமான அனுராக்கை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் மீட்பு படை களமிறங்கியுள்ளது.