அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சட்டவிரோத பணபரிவர்தனைக்காக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையிலிருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடனே அவர் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 -ஆம் தேதி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட அவர், பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு மாதம் வரை சிகிச்சை மேற்கொண்ட செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் மாதம் முதல் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி
இந்த நிலையில், நவம்பர் 15 அன்று, நெஞ்சு வலி, உயர் ரத்த அழுத்தம், கைகால் மரத்து போதல் போன்ற பல உடல் உபாதைகள் காரணமாக மீண்டும் ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், இன்று காலை, அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரின் உடல்நலனை காரணமாக கூறி ஜாமீன் கேட்கப்பட்டது. எனினும், நீதிபதி அதை நிராகரித்தார்