LOADING...
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம்; புதிய துணைப் பொதுச்செயலாளராக  திருச்சி சிவா நியமனம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம்; புதிய துணைப் பொதுச்செயலாளராக  திருச்சி சிவா நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2025
11:13 am

செய்தி முன்னோட்டம்

சமீபத்திய பொது நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி கிளம்பிய நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பொன்முடி, பாலியல் தொழிலாளி வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு கொச்சையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழி

கனிமொழி கடும் கண்டனம்

பொன்முடியின் அறிக்கைக்கு திமுகவின் முக்கிய பெண் தலைவராக விளங்கும் எம்பி கனிமொழி, சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கடும் கண்டனத்தை வெளியிட்டது பரப்பரப்பைக் கூட்டியது. இந்நிலையில், பெருகிவரும் விமர்சனங்களுக்கு மத்தியில், திமுக தலைமை பொன்முடியை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தொடர்ந்து அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றி வரும் நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, பொன்முடி பதவி பறிப்பைத் தொடர்ந்து, திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து திருச்சி சிவா எம்பி விடுவிக்கப்பட்டு, கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

திமுக அறிக்கை

ட்விட்டர் அஞ்சல்

திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு