ராக்கெட் விளம்பர சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடியில் நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்ததின் திறப்பு விழாவிற்கு வரவேற்கும் விதமாக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி,"குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது". "தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது. நான் இந்தியன்தான். இந்தியா மீது பற்றுள்ளவன்தான்." என்றார். தூத்துக்குடியில், மீனவர்களுக்கான இலவச பயிற்சி முகாமின் துவக்கவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் பேசுகையில் இதை தெரிவித்தார்.