
வங்க கடலில் உருவானது மிக்ஜாம் புயல்; 5ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு அடைந்து, தற்போது புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது புயல் இதுவாகும். இந்த புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள இந்த மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழக கரையோர மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
மிக்ஜாம் புயல் உருவானது
#BREAKING | வங்கக்கடலில் உருவானது ‘மிக்ஜாம்' புயல்#SunNews | #CycloneMichaung | #WeatherUpdate pic.twitter.com/Xd7DCdf0Zx
— Sun News (@sunnewstamil) December 3, 2023