Page Loader
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2023
01:57 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயல் தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இதனால் 60 -70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 140 கால்நடைகள் இறந்துள்ளன என்றும் 572 குடிசைகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், மின்கம்பங்கள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்