மிக்ஜாம் புயல் எச்சரிக்கை: KTCC மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக கடற்கரையை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்ந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்த நிலையில் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தற்போது தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
card 2
பொதுவிடுமுறை அறிவிப்பு
அதில், நாளை, KTCC (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு) மாவட்டங்களில் செயல்படும் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளித்து அறிவித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகள் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் (டிச. 03, 04) வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை (20.4 செ.மீக்கு மேல்) பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பொதுவிடுமுறை அறிவிப்பு
#BREAKING | மிக்ஜாம் புயல் எச்சரிக்கை : வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை! #SunNews | #CycloneMichaung | #Chennai | #ChennaiRains pic.twitter.com/rj7dZ2dTVN
— Sun News (@sunnewstamil) December 3, 2023