இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை நிலவரம்: உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 26ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும். நவம்பர் 22 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்
நவம்பர் 23
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி நவம்பர் 24 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் நவம்பர் 25 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.