கும்பாபிஷேகத்தை அடுத்து அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அயோத்தியில் உள்ள ராமர் கோவில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு, இன்று காலை பொதுமக்கள் பார்வைக்காக அக்கோவில் திறக்கப்பட்டது. நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கலந்துகொண்டனர். இன்று கோவில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதை அடுத்து, கோவில் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வரத் தொடங்கினர். காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வைக்காக வாயில்கள் திறக்கப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.