
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசியா மாநில உள்துறை மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு, மணிப்பூர் மாநிலத்தில் ஒருவர் உயிரோடு எரித்து கொள்ளப்படும் வீடியோ வைரலானதற்கு 3 நாட்களுக்குப் பின் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெய்ட்டி இன மக்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக்கோரி கடந்த மே 3 ஆம் தேதி நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது.
இந்த கலவரத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2nd card
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்கள்
இந்த உத்தரவு, கலவரங்கள், மக்கள் கொல்லப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது போன்ற வீடியோக்கள் பரப்பப்படும் போது, அது மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு மணிப்பூர் பழைய நிலைமைக்கு திரும்ப வழிவகுக்கும் என மாநில அரசால் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோர் மணிப்பூரின் சட்ட விதிகளின்படி தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணிப்பூரில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை, இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வன்முறை தொடர்பான அதிகப்படியான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதால் இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த உத்தரவு சற்று முன்னரே விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.