Page Loader
முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது
இந்த வெடிவிபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்

முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது

எழுதியவர் Sindhuja SM
Apr 05, 2023
02:07 pm

செய்தி முன்னோட்டம்

புதிதாக திருமணமான தனது முன்னாள் காதலிக்கு "வெடிகுண்டை" பரிசளித்த 33 வயது நபர் நேற்று(ஏப் 4) சத்தீஸ்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வெடிகுண்டு விபத்தில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலன், சர்ஜு மார்க்கம், தனது முன்னாள் காதலி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்தார். இதனால், புதுமணத் தம்பதிகளைக் கொல்வதற்காக ஹோம் தியேட்டரில் வெடிமருந்துகளை வைத்து அதை திருமண பரிசாக வழங்கினார்.

மார்க்கம்

திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து அந்த பெண்ணை ஏமாற்றிய மார்க்கம்

அந்த பெண்ணின் கணவர் ஹேமேந்திர மேராவி (32), அவரது சகோதரர் ராஜ்குமாருடன்(30) சேர்ந்து அந்த ஹோம் தியேட்டரை 'ஆன்' செய்தவுடன் பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேராவியின் மனைவி 2020 முதல் திருமணமான மார்க்கம் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி மேராவியின் மனைவியை மார்க்கம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மார்க்கம் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 326 (கடுமையான காயம்) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.