வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூலை 8) நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்குப்பெட்டியுடன் தப்பி ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த சம்பவம், மேற்கு வங்கத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலால் அம்மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீச்சு, வாக்குச் சீட்டுகள் சூறையாடல், வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு, கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்களும் இன்று மேற்கு வங்கத்தில் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.