Page Loader
தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்

தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2024
06:14 am

செய்தி முன்னோட்டம்

தேசபிதா என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் தேதி. மகாத்மா காந்தியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும், இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராகவும் பல கதைகளை கேட்டிருப்பீர்கள். இருப்பினும், அவரது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் ஒரு வழக்கறிஞராக, நியாயத்தின் போராளியாக அவர் வாழ்ந்து வந்தார். அந்த காலகட்டமே, அவரின் சுதந்திரப் போராட்டத்திற்கான அணுகுமுறையை பாதித்தது.

சட்டப் படிப்பு

மகாத்மா காந்தியின் சட்டப் படிப்பு

மோகன்தாஸ் கரமச்சந்த் காந்தி 1887ல் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.1888ல் இங்கிலாந்து சென்று சட்டம் படித்து பாரிஸ்டர் ஆனார். 1888 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, காந்திஜி இன்னர் டெம்பிளில் மாணவராக அனுமதிக்கப்பட்டார். இந்த நேரத்தில், அவர் லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையில் படிப்பிற்காக மாணவராக சேர்ந்தார். இன்னர் டெம்பிள் என்பது 14ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்து வரும் ஒரு இணைக்கப்படாத உறுப்பினர் சங்கமாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வழக்கறிஞர் பயிற்சி பெற மாணவர்களை அழைக்கும் பிரத்யேக உரிமையை இன்ஸ் ஆஃப் கோர்ட் கொண்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, காந்திஜி 1891ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

முதல் வழக்கு

காந்திஜியின் முதல் வழக்கு

இந்தியா திரும்பிய பிறகு, மகாத்மா காந்தி பம்பாயில் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். இங்கே, அவர் தனது முதல் வழக்கை எடுத்துக் கொண்டார். மாமிபாய் என்ற பெண்ணுக்காக அவர் வாதாடினார். அப்போது அவரது கட்டணம் 30 ரூபாய். காந்திஜி பிரதிவாதியான மாமிபாய் சார்பாக ஆஜராகியதால், நீதிமன்றத்தில் எதிர் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பதட்டம் காரணமாக அவர் குறுக்கு கேள்விகள் கேட்க தவறியதால், அந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்து, பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டாராம். 6 மாதங்கள் பம்பாயில் தங்கியிருந்த காந்திஜி தனது தனது வழக்கறிஞர் பணியை ராஜ்கோட்டில் தொடர் திட்டமிட்டார்.

டர்பன்

காந்திஜியின் டர்பன் பயணம்

1893 ஆம் ஆண்டில், காந்திஜி டர்பனில் உள்ள தாதா அப்துல்லா அண்ட் கோ நிறுவனத்திடம் பணி கிடைத்ததும் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கே காந்திஜி, ஒரு வழக்கறிஞரின் கடமை சட்ட மற்றும் எதிரிகளின் நன்மைகளைப் பயன்படுத்துவதல்ல, மாறாக சமரசம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே என்பதை உணர்ந்தார். முடிந்தவரை, அவர் தனது வாடிக்கையாளர்களை நீதிமன்றத்திற்கு வெளியே தங்கள் எதிரிகளுடன் சமரசமாக தீர்த்துக்கொள்ளவே அறிவுறுத்தினார். தான் வழக்கில் வெல்ல வேண்டும் என்பதை விட, சத்தியத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக சாட்சிகளும் பொய் சொல்ல கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். எனினும் ஜனவரி 1915 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து சமூக செவ்வையாக இந்தியாவுக்குத் திரும்பி நமது சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக ஆனார்.