5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் 52 வயது ஆசிரியர், தனது வகுப்பில் உள்ள மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் இன்று(மார் 13) தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், ஆசிரியருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்(போக்சோ) சட்டத்தின் பிரிவு 354 (ஒரு பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எட்டு சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய சம்பவம்
உதவி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டிருந்த குற்றவாளி, கல்வி அதிகாரியின் விசாரணைக்குப் பிறகு மார்ச் 11 அன்று கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் 5 ஆம் வகுப்பு படிக்கும் எட்டு சிறுமிகளுக்கு சில ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், கடந்த மாதம் அவர்களை தகாத முறையில் தொட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பள்ளி முதல்வரை அணுகி இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.