Loading...
இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார முன்னணி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார முன்னணி

இடைத்தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார முன்னணி! தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
12:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்று வரும் மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தொடக்கம் முதலே தனது வலுவான ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. 9வது சுற்று முடிவில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல். 10,336 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். திமுகவின் பரந்தாமன், 20,449 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை அதிமுகவின் கணிதா சம்பத், 17,543 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஜானகி ராமன் 925 வாக்குகள் பெற்றுள்ளார். சிபிஎம்யின் சுகந்தி 766 வாக்குகள் பெற்றுள்ளார்.

தாராபுரம்

தாராபுரம்: 11வது சுற்றில் தவெக மீண்டும் அபார முன்னணி

திருப்பூர் எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெறும் தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், அதிமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், 11வது சுற்றில் தவெக வேட்பாளர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

9வது சுற்று முடிவில், தவெகவின் சத்தியபாமா 4128 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுகவின் பானுமதி 22,503 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுகவின் சுகன்யா 22,521 வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 2,156 வாக்குகள் பெற்றுள்ளார். சிபிஐயின் லட்சுமணன் 509 வாக்குகள் பெற்றுள்ளார்.

தட்டாஞ்சாவடி

தட்டாஞ்சாவடி: என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்று முடிவில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்) - 13,358 வாக்குகள்

இரண்டாம் இடம்: விநாயகம் (காங்கிரஸ்) - 4,876 வாக்குகள்

வெற்றி வித்தியாசம்: 8,482 வாக்குகள்

தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளின் தொடக்கம் முதலே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT