NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு
    மதுரை எம்பி சு.வெங்கடேசன்

    மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 18, 2024
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.46.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

    மதுரையில் நான்கு வழிச்சாலையான திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் துவரிமான் - மேலக்கால் சந்திப்பு அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக உள்ளது.

    இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியான சு.வெங்கடேசன் நிதின் கட்கரியை சந்தித்து அங்கு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்திய நிலையில், கடந்த ஆண்டு இதற்கான திட்டப் பணிகளை தயாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டிருந்தார்.

    திட்டத்திற்கு ஒப்புதல்

    மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு

    இதையடுத்து திட்டப் பணிக்கான அறிக்கை மற்றும் நிலம் எடுப்பு போன்ற பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.46.09 கோடியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு.வெங்கடேசன் இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனது கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கி, அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த திட்டம் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது, துவரிமான் - மேலக்கால் சந்திப்பில் விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சு.வெங்கடேசன் எக்ஸ் பதிவு

    மதுரை மக்களுக்கு மற்றுமொரு நற்செய்தி;

    துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு.

    ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி.

    சு. வெங்கடேசன் எம் பி

    திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் - மேலக்கால் சந்திப்பு… pic.twitter.com/CjUR0eqS9q

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) August 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    நிதின் கட்கரி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    மதுரை

    பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது திருவிழா
    கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை மழை
    ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன் ஒடிசா
    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை திண்டுக்கல்

    நிதின் கட்கரி

    நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP' ஆட்டோமொபைல்
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! ஆட்டோமொபைல்
    கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி? ஆட்டோமொபைல்
    தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி இந்தியா

    தமிழ்நாடு

    அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் மழை
    தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் கனமழை
    மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி  மின்சார வாரியம்
    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு கல்லூரி

    தமிழ்நாடு செய்தி

    மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம் வங்கிக் கணக்கு
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  சென்னை
    தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழக அணி தோல்வி ஹாக்கி போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025