மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி மதுரை நகரில் மெட்ரோ அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகள் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விரிவான அறிக்கையை அளிக்க விரிவான ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் ரயில் நிலைய வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும்
#JustIn | மதுரை மெட்ரோ: விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!#SunNews | #Madurai | #MetroRail pic.twitter.com/cw2JVX69kP
— Sun News (@sunnewstamil) February 23, 2023