சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் முதற்கட்டமாக இணையம் வாயிலாக கட்டுமான நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது. இதற்கான திட்ட வரைவு செலவீனங்கள் உட்பட விரிவான அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு இணையம் வாயிலாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. மக்களின் பயணத்தினை எளிதாக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் சேவை நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கி.மீ. தூரம்
இதன் திட்ட அறிக்கை மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கி.மீ. தூரத்திற்கு இந்த மெட்ரோ ரயில் சேவையினை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தமிழ்நாடு அரசிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி வரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.