
மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து
செய்தி முன்னோட்டம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
அதனை எதிர்த்து," இது தனிநபரின் வழிபடும் உரிமைக்கு எதிரானது" எனக்கூறி, அந்த கட்டுப்பாடுகளுக்கு தடை கோரப்பட்டது.
இந்த மனுவினை விசாரித்த அமர்வு நீதிபதிகள், "மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையைப் பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
embed
கட்டுப்பாடுகள் ரத்து
#BREAKING | கள்ளழகர் திருவிழா - மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து மாவட்ட ஆட்சியர் கோயில் நிர்வாகத்திடமோ, சட்ட வல்லுனர்களிடமோ கேட்காமல் எவ்வாறு இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்கிறார் எனக்கேட்ட நீதிமன்றம், ஆட்சியர் சங்கீதா விளக்க கடிதம் அளிக்க உத்தரவிட்டது.#SunNews | #Madurai |... pic.twitter.com/sDsxFvKDmN— Sun News (@sunnewstamil) April 18, 2024