புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம்
பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து புத்தகத் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சியை நடத்தும். இந்த நிலையில், இந்தாண்டு மதுரையில் புத்தகத் திருவிழா எப்போது எங்கு நடைபெறும் என்பதற்கான அறிவிப்பினை தற்போது மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் செப்டம்பர் 6ஆம் தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 6 முதல் 16 வரையில் 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சிதலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.