வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு : வங்கக்கடலில் வரும் மே 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அண்மையில் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு - மேற்கு திசையிலான காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மே 2 மற்றும் 3ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 4 மற்றும் 5ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவ
இந்நிலையில் தற்போதைய அறிக்கையில் வரும் 6ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி முதல் தேனி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.