பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு
தப்பியோடிய காலிஸ்தானி தலைவரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) ஆகியவற்றை பிறப்பித்துள்ளது. அம்ரித்பால் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுக்செயின் சிங் கில், பஞ்சாப் காவல்துறை தலைமையகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது கூறினார். "அவரை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அவரை கைது செய்து விடுவோம் என்று நம்புகிறோம். மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து பஞ்சாப் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்கள் வெளியீடு
"தப்பியோடிய அம்ரித்பால் சிங்குக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்று பஞ்சாப் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. அம்ரித்பால் சிங்கைக் கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பஞ்சாப் காவல்துறை அவரது புகைப்படங்களை நேற்று(மார்-21) வெளியிட்டது. "அம்ரித்பால் சிங், வெவ்வேறு உடைகளில் இருக்கும் பல படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தையும் வெளியிடுகிறோம். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய மக்கள் எங்களுக்கு உதவும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று சுக்செயின் செய்தியாளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக, இதுவரை மொத்தம் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்