LOADING...
அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ
தீவிர போதகரான இவர் தப்பி செல்வது, ஜலந்தரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.

அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ

எழுதியவர் Sindhuja SM
Mar 21, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பல்லாயிரம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி சென்ற போது பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. தீவிர போதகரான இவர் தப்பி செல்வது, ஜலந்தரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. சனிக்கிழமை காலை சரியாக 11.27 மணியளவில் இவர் அந்த வழியாக தப்பி சென்றிருக்கிறார். சனிக்கிழமை அன்று தான் அமிர்த்பாலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையை தொங்கி இருந்தனர். அன்று SUV, மோட்டார் சைக்கிள், மாருதி பிரெஸ்ஸா போன்ற பல வாகனங்களை பயன்படுத்தி இவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிவிட்டார். இப்போது மாநிலம் முழுவதும் இவரை பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அம்ரித்பால் சிங்கின் சிசிடிவி வீடியோ