NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி
    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி
    எழுதியவர் Sindhuja SM
    Mar 30, 2023, 01:39 pm 1 நிமிட வாசிப்பு
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி
    லலித் மோடி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இந்தியன் பிரீமியர் லீக்(IPL) முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். தன்னைக் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி கூறியுள்ளார். IPLலில் நிதி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து லலித் மோடி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வருகிறார். சமீபத்தில், குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 'மோடி' என்ற குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

    நான் தப்பியோடிய குற்றவாளி இல்லை: லலித் மோடி

    கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, "எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள்?" என்று கூறி இருந்தார். அப்போது, நீரவ் மோடி, நரேந்திர மோடி மற்றும் லலித் மோடி ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனாலேயே அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தற்போது ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்திருக்கும் லலித் மோடி, "நான் தப்பியோடிய குற்றவாளி என்பது போலவே ராகுல் காந்தி பேசுகிறார். ஏன்? எப்படி? எப்போது நான் குற்றவாளி ஆனேன்? ராகுல் காந்தி மீது குறைந்தபட்சம் இங்கிலாந்து நீதிமன்றத்திலாவது உடனே வழக்கு தொடர வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    யுகே

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    காங்கிரஸ்

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் டெல்லி
    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா

    யுகே

    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து உலகம்
    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023