கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், பல ஸ்டார் போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள்- ராகுல் காந்தி, சசி தரூர், ஹேமமாலினி, அருண்கோவில் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டாம் கட்ட தேர்தலில், கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அஸ்ஸாம் மற்றும் பீகாரில் தலா 5, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3, கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 1 இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
2ஆம் கட்ட வாக்குப்பதிவு
#ElectionUpdate | 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் ▪️ கேரளா - 20 தொகுதிகள் ▪️ கர்நாடகா 14 தொகுதிகள் ▪️ ராஜஸ்தான் 13 தொகுதிகள் ▪️ மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள் ▪️ மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள் அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள் ▪️... https://t.co/FlbvcEu68L— Sun News (@sunnewstamil) April 26, 2024