மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடம் சிறுத்தையின் கால் தடங்களை பொதுமக்கள் காண்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மயிலாடுதுறை காவல்துறை.
இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, தெரு நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்ற காட்சிகளில் CCTV-யில் பதிவாகி இருந்தது.
தற்போது சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிறுத்தை நடமாட்டம்
#WATCH | ஊருக்குள் புகுந்து அசால்டாக நடமாடும் சிறுத்தை - அச்சத்தில் உறைந்த மக்கள்..!#SunNews | #Mayiladuthurai pic.twitter.com/3Syv9PH56J
— Sun News (@sunnewstamil) April 3, 2024