
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்களை அரசு வெளியிட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் வரவிருக்கும் பட்ஜெட் கூட்ட தொடர் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த கட்டிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்படுகிறது.
பெரிய அரங்குகள், நூலகம், பெரிய வாகன நிறுத்துமிடம் மற்றும் மீட்டிங் அறைகள் போன்றவைகள் இந்த கட்டிடத்தில் இருக்கின்றன.
அரங்குகள் மற்றும் அலுவலக அறைகள் அதிநவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள்
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!https://t.co/bUx37VUWHT pic.twitter.com/FfoWTNO67G
— Dinakaran (@DinakaranNews) January 20, 2023