
மதுரை அதிமுக மாநாடு - அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட கெட்டுப்போன உணவுகள்
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியின் எழுச்சி மாநாடு நேற்று(ஆகஸ்ட்.,20) எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்தது.
இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்ட நிலையில் இவர்களுக்கான உணவு பிரம்மாண்ட உணவுக்கூடங்கள் அமைத்து 10,000 பேர் கொண்டு சமைக்கப்பட்டு, உணவினை கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 10 லட்சம் பேருக்கு சமைக்கப்பட்ட புளியோதரை, சாம்பார் போன்ற உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் இரவு வரை உணவு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், டன் கணக்கிலான அண்டா அண்டாவாக புளியோதரை கெட்டுப்போகி கீழே கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பாதி பேர் காலையில் உணவு அருந்திவிட்டு வந்ததாலும், பலர் மதியவேளைக்கு மேல் வந்ததாலும் உணவுகள் மீதமடைந்தது என்று நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
கெட்டுப்போன புளியோதரை
#WATCH | மதுரை: அண்டா அண்டாவாக கெட்டுப்போன புளியோதரை; டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!
— Sun News (@sunnewstamil) August 21, 2023
2 நாளைக்கு முன்பே புளியோதரை தயார் செய்ததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் விமர்சனம்!#SunNews | #ADMKMaduraiMeeting | #Madurai pic.twitter.com/60mK6iWBjg