Loading...
தீபாவளிக்கு முன் மத்திய அமைச்சரவை மாற்றமா? எல்.முருகனின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து வெளியான தகவல்
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன்

தீபாவளிக்கு முன் மத்திய அமைச்சரவை மாற்றமா? எல்.முருகனின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து வெளியான தகவல்

எழுதியவர் Vasuki
Oct 13, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த எல். முருகன் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் தீவிர கட்சிப் பணிகளை மேற்கொள்ள விரும்புவதால் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

காலி இடங்கள்

புதிய அமைச்சர்கள் வரவு

பிரதமர் நரேந்திர மோடியின் 3-வது ஆட்சிக் காலம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், இதுவரை அமைச்சரவை மாற்றியமைக்கப்படாமல் இருந்தது.

அண்மையில் ரவ்நீத் சிங் பிட்டு மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்களும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

மேலும், ஹர்தீப் சிங் பூரி, பி.எல். வர்மா போன்றோரின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் பரிந்துரைக்கப்படவில்லை.

டெல்லி பாஜக தலைவராக ஹர்ஷ் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுள்ளதால் பாஜகவின் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கைப்படி அவரும் விலகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் அமைச்சரவையில் அரை டஜன் இடங்கள் காலியாகியுள்ளன.

புதிய முகங்கள்

தீபாவளிக்கு முன் முடிவுகள்

சமீப நாட்களாக மத்திய அமைச்சர்களின் பணிகளை தனித்தனியாக ஆய்வு செய்து, நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாத நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக சிறப்பு அமர்வு கூட்டப்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

எல். முருகனின் ராஜினாமாவை தொடர்ந்து, தீபாவளிக்கு முன்னதாக புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவுபடுத்த உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT