NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு
    தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

    கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 30, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

    அதற்கு அப்பெண்ணின் தந்தை பதிலளித்துள்ளார்.

    "எங்கிருந்து, எப்படி இது [குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் இடையேயான தொலைபேசி உரையாடல்] வைரலானது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்," என்று அவர் ANI இடம் கூறினார்.

    கசிவு மறுப்பு

    பாதிக்கப்பட்டவரின் தந்தை, வைரல் ஆடியோவிற்கு பொறுப்பேற்க மறுப்பு

    தொலைபேசி அழைப்பில் கேட்ட குரல் அவருடையதா என்ற சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

    "நீங்கள் தான் அப்படிச் சொல்கிறீர்கள், ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. இந்த பிரச்சினை விசாரணையை பாதிக்காது" என்றார்.

    மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய ஊழியர் ஒருவருடன் அவர் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மூன்று ஆடியோ கிளிப்புகள் வியாழக்கிழமை வைரலானது.

    ஆரம்ப உரையாடல்

    முதல் தொலைபேசி அழைப்பு விவரங்கள் 

    பதிவுசெய்யப்பட்ட முதல் தொலைபேசி உரையாடலில், பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு அழைப்பாளர், "உங்கள் மகள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீங்கள் வேகமாக வர முடியுமா?"

    அவரது உடல்நிலை குறித்து கேட்டபோது, ​​"அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவளுக்கு என்ன நடந்தது என்று டாக்டர்கள் கூறலாம்" என்று அழைப்பு விடுத்த அந்த மர்ம பெண் பதிலளித்தார்.

    அந்த அழைப்பு ஒரு நிமிடம் 11 வினாடிகள் நீடித்தது.

    பின்தொடர்தல் உரையாடல்

    இரண்டாவது தொலைபேசி அழைப்பு விவரம்

    அதே அழைப்பாளரிடமிருந்து இரண்டாவது தொலைபேசி அழைப்பு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்தது.

    அந்த பெண், "அவளது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, தயவுசெய்து விரைவில் வந்து விடுங்கள்" என்று கூறுவது கேட்கிறது.

    அப்பெண்ணின் அடையாளம் குறித்து கேட்டபோது, ​​"நான் உதவி கண்காணிப்பாளர், நான் ஒரு மருத்துவர் அல்ல" என்று பதிலளித்தார். இந்த அழைப்பு சுமார் 46 வினாடிகள் நீடித்தது.

    சோகமான செய்தி

    இறுதி தொலைபேசி அழைப்பு

    அதே நபரிடம் இருந்து வந்த மூன்றாவது மற்றும் இறுதி அழைப்பு பாதிக்கப்பட்டவரின் மரணத்தை அறிவித்தது.

    அழைத்தவர், "ஆமாம், தயவு செய்து கேளுங்க...நாங்க முன்னாடியே பலமுறை சொல்லிக்கிட்டு இருக்கோம்...உங்க பொண்ணு...தற்கொலை செஞ்சிருக்கலாம்..அல்லது செத்து போயிருக்கலாம்.போலீஸ் இருக்கு. நாங்கள் மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் இங்கே இருக்கிறோம்."

    பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் இறந்து கிடந்தார்.

    பிரேத பரிசோதனை அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்தது, அவரது உடலில் 25 உள் மற்றும் வெளிப்புற காயங்கள் காணப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    மருத்துவமனை
    பலாத்காரம்
    பாலியல் வன்கொடுமை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கொல்கத்தா

    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1 இந்தியா
    மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்

    மருத்துவமனை

    பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி பாலிவுட்
    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன்
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி  அதிமுக

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    பாலியல் வன்கொடுமை

     'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை  தமிழ்நாடு
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசிக
    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025