மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப்
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யாரென்று தெரியும் என்றும், அது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார். சுதீப், "ஆமாம், எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. அதை அனுப்பியது யார் என்று எனக்குத் தெரியும். அதை அனுப்பியது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தான் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நான் தகுந்த பதிலளிப்பேன்" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். "அவர்களுக்கு என்னையும் எனது முகவரியையும் தெரியும். அதனால்தான் அவர்கள் எனக்கு தபால் மூலம் கடிதத்தை அனுப்பியுள்ளனர். நான் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வருவேன். மிரட்டல் கடிதத்திற்கு நான் பதிலளிப்பேன்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்
சுதீப்பின் தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப போவதாக மிரட்டல்
கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு மிரட்டல் கடிதம் கிடைத்ததைப் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் கிச்சா சுதீப்புக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை அனுப்பி நபர் சுதீப்பின் தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத அந்த நபர் மீது ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.