Page Loader
கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

தீவிர சீக்கிய போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை துரத்தி சென்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால், ஜலந்தரின் ஷாகோட் தாலுகாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படையினர் அடங்கிய சிறப்புக் குழு, பிரிவினைவாதத் தலைவரின் கார்களைப் பின்தொடர்ந்து சென்று அவரை கைது செய்தது. அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. கலவரம் நடந்துவிட்ட கூடாது என்பதற்காக, அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பாலின் சொந்த கிராமமான ஜல்லுபூர் கைராவுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கிராமத்திற்கு வெளியே காவலுக்கு நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்

யாரிந்த அம்ரித்பால் சிங்?

அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த தீவிர பிரிவினைவாத தலைவரை, ஆயுதம் ஏந்திய உதவியாளர்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் சாலை விபத்தில் இறந்த நடிகரும் ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்ட "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற தீவிர அமைப்பிற்கு இவர் தலைவர் ஆவார். இவரது இந்த அமைப்பு சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்; என்ற தனி தேசம் வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.