Page Loader
கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது
ரயில் தீயில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது

எழுதியவர் Sindhuja SM
Apr 05, 2023
10:34 am

செய்தி முன்னோட்டம்

கேரள ரயில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின்(ATS) கூட்டுக் குழு இன்று(ஏப் 5) கைது செய்தது. "கேரள காவல்துறையின் குழுவும் ரத்னகிரிக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று மகாராஷ்டிர ATS அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று, கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் ரயிலின் பெட்டிகளை தேசிய புலனாய்வு முகமை(NIA) ஆய்வு செய்தது. கடந்த ஞாயிற்றுகிழமை, கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் ஒருவர் வேண்டுமென்றே பயணிகள் மீது தீ வைத்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரிபொருளை தெளித்து ரயிலுக்கு தீ வைத்திருக்கிறார்

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் சந்தேக நபர், ஒரு பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். சந்தேக நபரின் ஓவியத்தை கேரள போலீசார் தயாரித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரசாக் என்பவரின் உதவியுடன் கோழிக்கோட்டில் உள்ள இலத்தூர் காவல் நிலையத்தில் வரைபடம் தயாரிக்கப்பட்டது. மூன்று பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், ஐந்து பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் குறைந்தது மூன்று பேர் பெண்கள் ஆவர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற எரிபொருளை தெளித்து ரயிலுக்கு தீ வைத்ததாக காயமடைந்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.