ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
செய்தி முன்னோட்டம்
கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று மாலை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் அந்த தாய் ஏமனுக்குச் சென்று, தனது மகள் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற "இரத்த பணம்" (BLOOD MONEY) பேரம் பேசுவதற்கு அனுமதித்தது.
"இரத்தப் பணம்" என்பது யேமனில் நடைமுறையில் உள்ள ஷரியா சட்டத்தின்படி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தால் அவரது விடுதலைக்காகத் தரக்கூடிய இழப்பீடு ஆகும்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு, அவரது தாயார் ஏமன் பயணம் செய்வது முக்கியம்.
card 2
ஏமனில் உள்ள இந்திய தூதரகம் செயல்பாட்டில் இல்லை
ஏமனுக்கு இந்திய பிரஜைகள் செல்ல கடந்த 2017 ஆண்டு முதல் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
அங்கே நிலவி வரும் அசாத்தியமான சூழலால் இந்த தடை தற்போதும் அமலில் உள்ளது.
அதனால், அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்திய குடிமக்கள் ஏமன் செல்ல முடியாது. இந்த வழக்கில், மத்திய அரசின் தடையை தளர்த்த முடியுமா என நீதிமன்றம் கேட்டதற்கு, ஏமனுடன் இந்தியா தூதரக உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், அங்குள்ள தூதரகத்தை மூடிவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அந்த நாட்டில் சர்வதேச ஒப்பந்தம் எதுவும் பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும் இன்றி, தனது சொந்தப் பொறுப்பில் பயணம் மேற்கொள்வதாக, பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு நிமிஷாவின் தாயாரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
card 3
ஏமன் நாட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றுள்ளார் நிமிஷா
ஏற்கனவே திருமணம் ஆன செவிலியர் நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் மருத்துமனை தொடங்க, அந்நாட்டவரை திருமணம் செய்ததாக பொய் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கு உதவியாக இருந்த அப்தோ மஹ்தி, பின்னர் அதை காரணமாக வைத்தே நிமிஷாவிற்கு தொல்லை கொடுத்து வரவே, அவரிடம் உள்ள தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், தலால் அப்தோ மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி அவரை கொலை செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2018 முதல் சிறையில் உள்ளார்.
ஏமேனி உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததால், இரு குடும்பங்களுக்கு இடையேயான "இரத்த பணம்" சமரச ஒப்பந்தம் மட்டுமே அவருக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை.