Page Loader
ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்! 
கேரளாவில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்! 

எழுதியவர் Siranjeevi
May 10, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் நபர் ஒருவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஹரிஸ் ரகுமான்(23). இவர் கோழிக்கூட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது. அப்போது டிரவுசரிலும் தீ பிடிக்க உடனடியாக ஹரிஸ் ரஹ்மான் தீயை அணைத்துள்ளார். இதனால் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தொடர்ந்து அவர் ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதும் எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் முதற்கட்ட சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post