NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு

    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 04, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரிலுள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் கடந்த அக்.,29ம் தேதி நடைபெற்றது.

    யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான அக்.,29ம் தேதி, தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்தது.

    இதில் லிபினா என்னும் 12 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் நேர்ந்த சில மணி நேரத்திலேயே கொச்சி பகுதியினை சேர்ந்த டொமினிக் பாண்டியன் என்பவர், தானாக சரணடைந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று காவல்துறையிடம் தெரிவித்தார்.

    அணிவகுப்பு 

    நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட அணிவகுப்பு 

    இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிறையிலுள்ள டொமினிக் பாண்டியனை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு அண்மையில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த 3 பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி இந்த அணிவகுப்பானது எர்ணாகுளம் பகுதியிலுள்ள, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட், டொமினிக் பாண்டியனை அடைக்கப்பட்டுள்ள காக்கநாடு மாவட்ட சிறைக்கு வருகை தந்திருந்த பொழுது நடத்தப்பட்டுள்ளது.

    குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று டொமினிக்கை சிலர் பார்த்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனராம்.

    அதனடிப்படையில் தான் இந்த அணிவகுப்பு 20 நிமிடங்கள் நடைப்பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு
    கைது
    சிறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கேரளா

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி விபத்து
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    கைது

    சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது  என்ஐஏ
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது பலாத்காரம்
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025