
வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் செல்போனில் 8 வயது சிறுமி வீடியோ பார்க்கையில் வெடித்து சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளா மாநிலம், திரிச்சூர் மாவட்டம் திருவில்மலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் ஆதித்யா வயது 8.
ஆதித்யா கடந்த நாள் இரவு 10.30 மணியளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டுடிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. பதறியடித்து வந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்த காவல்துறை செல்போன் வெடித்ததற்கான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு
— Thanthi TV (@ThanthiTV) April 25, 2023
திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி, வீடியோ பார்த்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்தது #Kerala | #mobileblast | #child pic.twitter.com/VEm6FU7woo