Page Loader
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று அமலாக்கத்துறை கைது செய்தது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2024
04:22 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள ரூஸ் வருவாய் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ED காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. அமலாக்கத்துறையின் காவல் முடிவடைந்ததையடுத்து, கெஜ்ரிவால் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில், கெஜ்ரிவால், ED தனது கட்சியை நசுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். "எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை" என்றும் கெஜ்ரிவால் வாதிட்டார். "மத்திய புலனாய்வுப் பிரிவு, 31,000 பக்கங்களையும் (குற்றப்பத்திரிக்கைகள்), ED 25,000 பக்கங்களையும் தாக்கல் செய்துள்ளது. நீங்கள் அவற்றை ஒன்றாகப் படித்தாலும்... கேள்வி எஞ்சியிருக்கிறது... நான் ஏன் கைது செய்யப்பட்டேன்?'' என்று கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, ஊழல் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

embed

அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு

🔴LIVE : கெஜ்ரிவாலின் காவல் ஏப்.1 வரை நீட்டிப்பு https://t.co/fmKcru2bqa— Thanthi TV (@ThanthiTV) March 28, 2024