கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் வளர்ச்சித் துறையால், தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் வழித்தோன்றல்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி, அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம், மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, சிறுகதைகள், கவிதைத்தொகுப்புகள், உரை நூல்கள் மற்றும் கடித தொகுப்புகள் என பல்லாயிரக்கணக்கான நூல்கள் தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.