ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
ஆளுநர் மாளிகை முன்பு, சென்ற வாரம், 'கருக்கா' வினோத் என்ற நபர், பெட்ரோல் குண்டு வீசினார்.
இவர் மாளிகையில் முதன்மை வாயில் நோக்கி இரண்டு குண்டுகள் வீசிய நிலையில், போலீசார் அவரை மடக்கி பிடித்து, தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அவரிடம் முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த நிலையில், இன்று 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அவர், தான் சிறையில் இருந்த சமயத்தில், நீட் தேர்வு தொடர்பான தற்கொலை செய்திகளை படித்ததில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
card 2
மகனின் மருத்துவ கனவு பலிக்காமல் போய்விடும் என அஞ்சியே குண்டு வீசியதாக வாக்குமூலம்
'கருக்கா' வினோத் தன்னுடைய வாக்குமூலத்தில், தன்னுடைய மகன் தற்போது ஆறாவது படிப்பதாகவும், அவனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தற்போது நடைமுறையில் நீட் தேர்வு இருப்பதால், மகனால் மருத்துவம் படிக்கமுடியாமல் போய்விடும் என அஞ்சியே குண்டு வீசியதாக கூறியுள்ளார்.
கவர்னர் ரவியிடம், NEET தேர்வு ரத்து செய்யவேண்டும் என ஆளும் கட்சி சார்பில் மனுக்கள் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைபட்டு உள்ளவர்களை விடுவிக்க கோரும் மனுவிற்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என மிரட்டல் விடவே, இந்த குண்டுகளை வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறையில், தான் எந்த பிரிவினைவாத குழுவையும் சந்திக்கவில்லை எனவும், இது தன்னுடைய சொந்த முடிவு எனவும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்
#BREAKING || ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? - போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு
— Thanthi TV (@ThanthiTV) October 31, 2023
"சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டது "
"ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில்… pic.twitter.com/W7EXI1fgnR