Page Loader
தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2024
06:47 pm

செய்தி முன்னோட்டம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ANI அறிக்கையின்படி, இணை குற்றவாளியான அப்போதைய கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் மீதான மேலதிக விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. PTI அறிக்கையின்படி, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நிர்மலா சீதாராமன், அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகள், மாநில மற்றும் தேசிய அளவிலான பாஜகவின் அலுவலகப் பொறுப்பாளர்கள் சிலர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு

நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்ததாகவும், 8,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கோடி ரூபாய் வரை பலன் பெற்றதாகவும், 'ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்' (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் புகார் அளித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ED அதிகாரிகளின் ரகசிய உதவி மற்றும் ஆதரவின் மூலம், மாநில மற்றும் தேசிய அளவில் மற்றவர்களின் நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறிக்க உதவினார் என்று புகார்தாரர் மேலும் குற்றம் சாட்டினார். தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்தற்காக நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post