கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது அவருக்கு பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் ஜவாலி நேற்று(அக்.,17) இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும்,
அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் பசவராஜ் பொம்மையின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
'அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியு வார்டில் வைக்கப்பட்டுள்ள அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வெண்டிலேட்டர் உதவி கொண்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார்' என்றும்,
'தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது' என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் பதிவு
முழங்கால் வலி இருந்த நிலையிலும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்
முன்னதாக மருத்துவர் ஆலோசனை படி, முழங்கால் வலிக்கான அறுவை சிகிச்சைக்காக இவர் பன்னர்கட்டா சாலையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
இவருக்கு சில வருடங்களாகவே கடுமையான முழங்கால் வலி இருந்த நிலையிலும் இவர் தொடர்ந்து இருந்த நிலையிலும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
பதவியில் இருந்த பொழுதே அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் நெருங்கும் காரணத்தினால் அவர் சிகிச்சை பெற செல்லவில்லை.
இதனிடையே தற்போது முன்னாள் முதல்வரான எடியூரப்பா தனது எக்ஸ் பக்கத்தில், 'எனது நெருங்கிய நண்பருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.