
கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான இறுதி கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. டிவி 9 பாரத்வர்ஷ்-போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு:(தொங்கு சட்டசபை, காங்கிரஸ் முன்னிலை) பாஜக: 88-98 காங்: 99-109 ஜனதா-தளம்: 21-26 இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு:(பெங்களூரில் காங்கிரஸ் முன்னிலை) பெங்களூரில் உள்ள 28 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக 10 இடங்களில் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ABP C வாக்காளர் கருத்துக்கணிப்பு:(தொங்கு சட்டசபை, காங்கிரஸ் முன்னிலை) பாஜக: 83-95 காங்கிரஸ்: 100-112 ஜனதா தளம்: 21-29 நியூஸ் நேஷன்-சிஜிஎஸ்:(பாஜக முன்னிலை) பாஜக 114 இடங்களிலும், காங்கிரஸ் 86 இடங்களிலும், ஜனதா-தளம் 21 இடங்களிலும் வெற்றி பெறும்.
details
பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய இறுதி கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்
சுவர்ணா செய்திகள்-ஜன் கி பாத்:(பாஜக முன்னிலை) பாஜக: 94-117 காங்கிரஸ்: 91-106 ஜனதா தளம்: 14-24 ரிபப்ளிக் டிவி-பி மார்க்:(காங்கிரஸ் முன்னிலை) பாஜக: 85-100 காங்கிரஸ்: 94-108 ஜனதா தளம்: 24-32 டைம்ஸ் நவ்-ETG:(காங்கிரஸ் முன்னிலை) பாஜக: 85 காங்கிரஸ்: 113 ஜனதா தளம்: 23 பெரும்பான்மையான இறுதி கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆனால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் தான் யார் ஆட்சிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.